ஹைதராபாத்: ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள ஹைதராபாத் அணியான ‘சன் ரைசர்ஸ்' அணியின் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ராஜாளி சிறகை விரித்து இருக்க அதன்பின்னால் சூரியன் உதித்து வருவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட சின்னம் உண்டு. இந்த சின்னம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வீரர்கள் விளையாடுவார்கள். அதை விளம்பரப்படுத்தவும் செய்வார்கள். ஹைதராபாத் அணியை முன்பு வாங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சின்னமாக சீறிவரும் காளை இருந்தது. இப்போது சன் குழுமம் ஹைதராபாத் அணியை வாங்கியபின்னர் அதன் பெயரும் சின்னமும் மாறியுள்ளது.
Thursday, December 20, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment